திரைவிமர்சனம் 16-ம் பக்கம்

வேலையில்லா பட்டதாரி

நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, ,...
ADVERTISEMENTS

சதுரங்க வேட்டை

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை விளம்பரப்படுத்துவது மட்டுமே படத்தை ஒட வைத்து விடும் என்ற அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் சுமாரான படத்தைக் கூட நாலு விஐபிக்களை விட்டு சூப்பர் படம்..அருமையான படம்...எனச் சொல்ல வைத்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முயற்சிக்கிறார்கள். அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி வந்தாலும் படம் பார்க்கும் சராசரி ரசிகன், ,...

பப்பாளி

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி கலெக்டராக ஆசைப்படும் ஒரு படிப்பாளியின் கதைக்கு 'பப்பாளி' என இரட்டை அர்த்த தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை ரைமிங்காக இருக்கட்டுமே என கூடுதலாக “பப்பாளி, தக்காளி” என பெயர் வைக்காமல் விட்டாரே என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. பொதுவாக பெண்களைத்தான் பப்பாளி, தக்காளி, என இளைஞர்கள் அழைப்பது வழக்கம். எனவே, அதையே பெயராக ,...
ADVERTISEMENTS

நளனும் நந்தினியும்

தமிழ் சினிமாவில் முதல் படத்தை இயக்கி அறிமுகமாக வரும் பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படக் கதை அவர்களின் சொந்த வாழ்க்கையாகவோ, அல்லது நண்பர்களின் வாழ்க்கையாகவோ, அவர்கள் ஊரில் பார்த்த விஷயங்களாகவேதான் இருக்கும். அதில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து சுவாரசியமாகக் கொடுக்க முயற்சிப்பார்கள். முதல் படத்தை எப்படியாவது உணர்வு பூர்வமாகக் கொடுத்து ரசிகர்களின் மனதைக் கவர முயற்சிப்பார்கள். சிலர் ,...

ராமானுஜன்

நீங்கள் அடிக்கடி 'ஏடிஎம்'முக்குச் சென்று பணம் எடுப்பவரா, மெயில் இல்லாமல் உங்கள் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியவில்லையா...இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்த ஜீனியஸ் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம். கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் என்ற கணித மேதைதான் அதற்குக் காரணம். ,...
ADVERTISEMENTS

வடகறி

படத்தோட தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம வந்திருக்கிற படம். படத்தோட ஆரம்பத்துலயே அது என்ன வடகறின்னு யோசிக்காதீங்கன்னு ஒரு கேரக்டர் மூலமா சொல்லிடறாங்க. அதனால நாம அதைப் பத்தி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணைக் காதலிக்கிறதுக்கு என்னென்னமோ தகுதிகள் தேவைன்னு நாம நினைக்கிறோம். ஆனால், இந்தக் காலத்துல ஒரு காஸ்ட்லியான போன் இருந்தால் போதும்கற நிலைமைக்கு ,...