தமன்சே திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
5துப்பாக்கியின் பின்னணியிலும், ரவுடிகளின் பின்னணியிலும் உருவாகியுள்ள ரொமான்டிக் படம் தான் தமன்சே. கதையில் அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே யூகிக்க முடிவதால், நவநீத் பெகாலின் இயக்கம் பலவீனமாக தெரிகிறது.


கதைப்படி ஹீரோ முன்னாவான நிகில் திவேதியும், ஹீரோயின் பபுவான ரிச்சா சதாவும் வெவ்வேறு கிரிமினல்கள். ஒருக்கட்டத்தில், இக்கட்டான நிலையில் இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்படும் பழக்கம் காதலாகும் தருவாயில் பபு அவரை பிரிந்து செல்கிறார். பபுவை தேடி அலையும் முன்னா, அவர் ராணா தவு(தமன்தீப் சிங்) எனும் கொள்ளைக்கூட்டத்தில் இருப்பது தெரியவருகிறது. தனது காதலுக்காக முன்னாவும் அந்தக்கூட்டத்தில் சேருகிறார். முன்னா-பபுவின் காதல் கைகூடியதா.? ராணாவின் கூட்டத்தில் இருந்து முன்னா-பபு இருவரும் வெளியேறினார்களா.? என்பது தான் தமன்சே படத்தின் மொத்தகதையும்!


நிகில் திவேதி உயிரை கொடுத்து நடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் அவரது நடிப்பு எடுபடவில்லை. தனது கேரக்டர் தன்மையை அறிந்து அவர் நடிக்க தவறிவிட்டார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள், அவரது நடிப்பு, பாவனைகள் எல்லாம் செயற்கை தனமாக தெரிகிறது.


ரிச்சாவின் நடிப்பு ஓ.கே., என்றாலும் அவர் கொள்ளைக்கூட்டத்தில் இருந்து கொண்டு செய்யும் செயல்கள் எல்லாம் அபட்டமாக, செயற்கை தனமாக தெரிகிறது. நிகிலை போல, ரிச்சாவும் வசனக்காட்சிகளில் சொதப்பியுள்ளார்.


தமன்தீப் சிங்கின் நடிப்பு தான் ஆறுதல், இருந்தாலும் மோசமான திரைக்கதை, இயக்கத்தால் இவரது நடிப்பும் பலவீனமாக தெரிகிறது.


பல காட்சிகளில் படத்தின் ஒளிப்பதிவு மிக மோசமாக உள்ளது. இதேப்போல் படத்தொகுப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் சேர்த்திருக்கலாம்.


இயக்குநர் நவநீத் பெகாலை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ரசிகர்களை அவர் டார்ச்சர் செய்திருக்கிறார். படத்தில் ஆரம்பத்தில் போலீசில் இருந்து தப்பித்து ஓடும் ஹீரோயின் ரிச்சா, படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். படம் முழுக்க ஒரு சினிமாத்தனமே இருக்கிறது. அடுத்தடுத்து என நடக்கும் என்று முன்கூட்டியே யூகிக்கவும் முடிகிறது. மேலும் படத்தில் கதையோ, காட்சிகளோ பெரிதாக இல்லாததாலும் இப்படம் ரசிகர்களை சுத்தமாக கவரவில்லை.


''தமன்சே''-யில் கதை குறைபாடு இருந்தாலும் வசனங்களுக்காக ஒரு தடவை வேண்டுமானால் பார்க்கலாம், மற்றபடி ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டதால் ''தமன்சே'' - 'தமசாகிவிட்டது!'
ADVERTISEMENTS