குட்டி திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
வளைந்து நெளிந்து ‌கொடுப்பது மட்டும் அல்ல... வலிந்து நலிந்து பெறுவதும்தான் காதல்! எனும் புதிய தத்துவம் சொல்லி வந்திருக்கும் படம்தான் குட்டி. தெலுங்கில் ஆர்யா எனும் பெயரில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீ-மேக் என்றாலும் குட்டியில் தமிழுக்காக நிறையவே மாற்றங்கள் செய்திருக்கின்றனர். அந்த மாற்றங்கள் சில, பல இடங்களில் குட்டிக்கு ஏற்றம்! சில இடங்களில் ஏமாற்றம்!

கதைப்படி தற்‌கொலை நிர்பந்தத்தால் ஆளுங்கட்சி எம்.பி.,யின் மகன் அர்ஜூனை காதலிக்க தொடங்கும் ஸ்ரேயாவை குட்டி தனுஷூம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஸ்ரீநாத், மொட்டைத்தலை தேவிசரண், வின்சென்ட் அசோகன் என தன் மற்றும் தனது தந்தையின் படைபலம் காட்டி, குட்டியை விரட்டி அடிக்கும் அர்ஜூனையும், அவரது சகாக்களையும் தனது புத்திசாலித்தனமான பேச்சு சாதுர்யத்தால் சரிகட்டும் தனுஷ், பின்பாதியில் ஸ்ரேயா - அர்ஜூன் காதலுக்கு உதவி செய்வதுபோல் செய்து ஸ்ரேயாவின் மனதை கொள்ளை கொள்வதே குட்டி படத்தின் மொத்த கதையும்!

ஒன் சைடு லவ்வர் குட்டியாக தனுஷ், அடிக்கும் லூட்‌டி வழக்கம் போலவே செம ப்யூட்டி! வில்லன் அர்ஜூனை என்மேல கைய வச்ச..., நான் இந்‌த காலேஜை விட்டு போயிடுவேன்... உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்... என்று சொல்லி அடிக்கடி கலாய்ப்பதிலும் சரி., உடம்பு சரியில்லாத ஸ்ரேயாவை பார்க்க பழங்கள் வாங்க போகும் அர்ஜூனை தடுத்து அவரது பைக்கிலேயே போய் தான் மட்டும் பழம் கொடுத்து அசத்துவதிலும், ஸ்ரேயாவின் பர்த்டேக்கு அர்ஜூனின் பிரேம் செய்த போட்‌டோவை கிப்ட்டாக கொடுத்து அசத்தி விட்டு, எனக்கு பிடிச்ச அவளுக்கு இன்று அவளுக்கு பிடிச்ச உன் போட்டோ... நாளைக்கு என் போட்டோ கொடுப்பேன் என டயலாக் விடுவதிலாகட்டும் தனுஷூக்கு நிகர் தனுஷ்தான்!

நாயகி ஸ்ரேயா., தனுஷ் படத்தில் மட்டு எப்படி இவ்வளவு அழகாக, அம்சமாக தெரிவாரோ தெரியவில்லை! வாவ்! இரண்டு ‌பேருக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், ஜாகரபி, ஹிஸ்ட்ரி எல்லாம் ரொம்ப சூப்பரா ஒர்க் அவுட் ஆகுதுங்கோ! கீப் - இட் - அப்!

புதுமுக வில்லன்., ஸ்ரேயாவின் காதலன் அர்ஜூனாக தியான் பல இடங்களில் ஹீரோவாக தெரிந்தாலும் மெனக்கெட்டு வில்லனாக்கி இருக்கிறார்கள். காமெடிக்கு ஸ்ரீநாத், ஆர்த்தி, நீலிமா, மொட்டைத்தலை தேவிசரண், சிலோன் மனோகர் உள்ளிட்டவர்களும், வில்லத்தனத்திற்கு ராதாரவி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டவர்களும் இருக்கின்றனர்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ‌யாரோ என் நெஞ்சை..., நீ காதலிக்கும் பொண்ணு உள்ளிட்ட பாடல்கள் இதம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்!. படத்தொகுப்பாளர் கோவா பாஸ்கரின் கத்திரி பின்பாதியில் பெரிதாக வேலை செய்யவில்லை போலும். அதனால் இரண்டு மூன்று முஐற படம் முடிந்த பீலிங்! மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் குட்டி.., முன்பாதி சுட்டி, பின் பாதி செம லூட்டி!
ADVERTISEMENTS