திரைவிமர்சனம்

தமிழகத் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ்த் திரைப்படத் துறையை குறிக்கும்.
ADVERTISEMENTS

தமிழரின் அன்றாட வாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த் திரைப்படத் துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்து பல தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஊடாக நாட்டு விடுதலை கருத்துக்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பபட்டுள்ளன.
ADVERTISEMENTS

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இடையில் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு வலுவான பாலமாகத் திகழ்கின்றன. நிகழ்காலப் பேச்சுத் தமிழ், நாட்டு நடப்புகள், பண்பாட்டுப் போக்குகள் ஆகியவை குறித்த தோற்றத்தை நிறுவுவதில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கு இன்றியமையாதது.
ADVERTISEMENTS