மொசக்குட்டிž திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
11ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த ஜீவனின் இயக்கத்தில் ஜீவனுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் மொசக்குட்டி

திருட்டு, புரட்டு..என ஜகஜால கில்லாடி என்றாலும், அது வெளித்தெரியாமல் பெரும்புள்ளியாக பள்ளப்பட்டி பகுதியில் பவனி வருகிறார் விருமாண்டி - ஜோ மல்லூரி; அவரது அண்டர்கிரவுண்ட் வேலைகள் அனைத்திற்கும் அறிவிக்கப்படாத ரெப்ரஸன்டேட்டீவ்களாக குறைந்த கூலிக்கு செயல்படுகின்றனர் மொசக்குட்டி பாலா -வீராவும், சென்ட்ஸ்-சென்டராயனும்!.

ஒருநாள் ஓடும் லாரியில் இருந்து இவர்கள் இறக்கி கடத்தும் பார்சல்கள் விருமாண்டி - ஜோ மல்லூரியின் மகள் கயல்விழி - மகிமாவை, போலீஸ் இழுத்து செல்லும் அளவிற்கு குடைச்சலை கொடுக்கிறது. நாயகி கயலை, போலீஸ் பிடியில் இருந்து விடுவித்து, களவு செய்தது நான் தான் என களம் இறங்கும் நாயகன் மொசக்குட்டி மீது நாயகி கயல் - மகிமாவிற்கு இருந்த ஈர்ப்பு காதலாக மாறி கசிந்துருகுகிறது. அப்புறம்? அப்புறமென்ன?... களவு கதை போய் ஸ்கிரீனில் இவர்களது காதல் கதை விரிகிறது.

மொசக்குட்டிக்கு ஜோ மல்லூரி குடும்பத்தாரால் செம மொத்து கிடைக்கிறது. கூடவே மகள் மகிமாவை கேரளா இடுக்கியில் இருக்கும் தன் தம்பி காசி - பசுபதியின் வீட்டிற்கு நாடு கடத்துகிறான் விருமாண்டி - மல்லூரி.

விடுவாரா? வீரா - மொசக்குட்டி...? குத்துயிரும், கொலை உயிருமாக கிடந்த தன் உடம்பில் பட்ட காயங்கள் ஆறியதும் நாயகியைத் தேடி இடுக்கிக்குப் போகிறார். அண்ணன் ஜோ மல்லூரி்கை காட்டிலும் பெரும் தில்லாலங்கடியான காசி - பசுபதியின் கண்காணிப்பில் இருந்து நாயகி கயல் - மகிமாவை நாயகன் மொசக்குட்டி - வீரா மீட்டு கரம்பிடித்தாரா?.. மீளாத்துயருக்குள்ளானாரா?...என்பது இடுக்கி மலை எழில் பின்னணியில் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கும் மொசக்குட்டியின் மீதிக்கதை!.

மொசக்குட்டி பாலாவாக வீரா அறிமுகம், புதுமுகம் எனத்தெரியாத அளவிற்கு ஆட்டமும், பாட்டமுமாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கயல்விழி - மகிமா, காதல் மொழியை கண்களாலும், கட்டுடலாலும் பேசுகிறார். பேஷ்..பேஷ்..! விருமாண்டி - ஜோ மல்லூரி , காசி - பசுபதி இருவரும் போட்டி போட்டு மிரட்டி இருக்கின்றனர். சென்ட்ராயன் மினிமம் கியாரண்டி, மிடில்கிளாஸ், லோ கிளாஸ் நண்பன் பாத்திரங்களுக்கு கச்சிதம்!. தண்ணிவண்டி எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், சிசர் மனோகரின் செல்போன் , ஆக்ஸிடெண்ட், எபிசோட் முதலில் சிரிப்பாகவும், பின் சீரியசாகவும் இருக்கிறது.

இயக்குனர் ஜீவனின் சகோதரர் மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் வழக்கம்போலவே ஜீவன் இருக்கிறது. ரமேஷ் விநாயகத்தின் இசையும், பாடல்களும் ரசிக்கும்படி, சுருதிலயம் தப்பாது இருக்கிறது.

ஜீவனின் எழுத்து, இயக்கத்தில் களவு செய்பவனுக்கும் காதல் கொள்ளும் கனத்த இதயம் உண்டு எனும் கருத்தை சொல்லியிருக்கும் " மொசக்குட்டி - படப்பெட்டி - பணப்பெட்டி - வரும் கெட்டி!" .
ADVERTISEMENTS