பி.கே (ஹிந்தி) திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
02சிறந்த கதை மற்றும் நட்சத்திரங்களின் திறன்மிகு நடிப்பிற்காக, பிகே படத்தை பார்க்கலாம்.

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, படத்தின் தரத்தை மட்டும் நம்பி படம் எடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம் பிகே. படம் இயக்குவதற்கு, அவர் அதிக காலங்கள் எடுத்துக்கொண்டிருந்தாலும், மீண்டும் ஒரு தரமான படத்தை தந்திருக்கிறார்.

வேற்றுக்கிரகவாசியான பிகே (அமீர் கான்). எதிர்பாராதவிதமாக, ராஜஸ்தானில் தரையிறங்குகிறார். அங்கு அவருக்கு ஸ்பேஸ்ஷிப் உடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த பூமியில் வாழவே, அமீர் கான் திட்டமிடுகிறார். அவரது மேனரிசம் மற்றும் அதீத அறிவு, இந்த பூமியில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும், மதங்கள் குறித்த அடிப்படை விவகாரங்களில் பலத்த கேள்விகளை எழுப்புகிறது. இந்நேரத்தில், உற்ற நண்பராக பைரோவ் சிங் (சஞ்சய் தத்), அமீர் கானுடன் வந்து இணைகிறார். ஜக்கு (அனுஷ்கா சர்மா)வும், அமீர் கானுடன் நண்பராக இணைகிறார். அனுஷ்கா, பெல்ஜியத்தில் படிக்கும் மாணவராக உள்ளார். அமீர் கான், இப்பூமியில் உள்ள பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, இறுதியில் கிளைமாக்சில் எவ்வாறு அமீர் முத்திரை பதி்க்கிறார் என்பதே, பிகே படத்தின் கதை....

ராஜ்குமார் ஹிரானி, இந்த படத்திலும் சமூக கருத்துகளை புகுத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ள போதிலும், அவரின் முந்தைய படைப்பான லகே ரகோ முன்னாபாய் அளவிற்கு இந்த படம் இல்லை என்றே கூறவேண்டும். பிகே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், படத்தின் வேகத்திற்கு தடையாக அமைவதோடு மட்டுமல்லாது, ரசிகர்களை, தங்கள் இருக்கையை விட்டு வெளியேறும்படி செய்து விடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தபோதிலும், எடிட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதது, படத்திற்கு பெரிய மைனஸ்சாக உள்ளது. பின்னணி இசை, படத்திற்கு மிகப்பெரும் பலம். கதை மற்றும் திரைக்கதை, ரசிகர்களை, பல இடங்களில் படத்தில் ஒன்றாமல் செய்துவிடுகிறது. வசனங்கள், ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. போஜ்புரி மொழியிலான வசனங்கள், ரசிகர்களிடம் ஒன்றவில்லை. காஸ்டியூம் மற்றும் ஆர்ட், படத்திற்கு பின்னடைவை தருகின்றன.

அமீர் கானின் நடிப்பு இந்த படத்திலும் மிளிர்கிறது. ஒவ்வொரு பிரேமிலும், அமீரின் நடிப்பு, அவரின் உழைப்பை காட்டுகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில், அமீரின் உணர்ச்சிமிக்க நடிப்பு கச்சிதம்...அமீர் உடன் அனுஷ்கா சர்மாவின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட், சிறிதுநேரமே வந்தாலும், அவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போமன் இரானி மற்றும் சவுரப் சுக்லா கதாபாத்திரங்களும் சிறியதாகவே இருந்தாலும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான நடிப்பில் சஞ்சய் தத் நடித்துள்ளார், ரன்பீர் கபூரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது.

நல்ல சினிமா விரும்புபவர்களுக்கு, பிகே படம், சிறப்பான விருந்தாக அமைந்துள்ளது.
ADVERTISEMENTS