எக்‌சோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
13கிளாடியேட்டர், பிராம்தியேஸ் போன்ற சரித்திர பின்னணியிலான ஹாலிவுட் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் உருவான

மிகப்பிரமாண்டமான புராதன கால வரலாற்று காவியம் தான் "எக்சோடஸ் : காட்ஸ் அண்ட் கிங்ஸ்" ஆங்கிலப்படம்!.

தானே கடவுள் எனும் எகிப்து சாம்ராஜ்யத்தின் இளம் கொடுங்கோல் அரசனை எதிர்த்து அவனது மூதாதையரின் ராஜ்ஜியத்தில் திறமை வாய்ந்த தளபதியாக இருந்த தனி மனிதன்., இந்த அரசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாகப் பிரிந்து சென்று, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கு தலைமை தாங்கி கொடுங்கோல் அரசனுடன் போராடி வெற்றி பெறும் கதைதான் எக்சோடஸ் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்.

இந்த கதையில் இயேசுகிறிஸ்துவின் மோசஸ் கதையையும் கலந்து கட்டி எத்தனைக்கு எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் ஒரு ஹாலிவுட் படத்தை தர முடியுமோ? அத்தனைக்கு அத்தனை பக்காவாக எக்சோடஸ் : காட்ஸ் அண்ட் கிங்ஸ் படத்தை தந்திருக்கிறார் ரி்ட்லி ஸ்காட்!.

அவரது எண்ணத்தையும், எழுத்தையும் அப்படியே உள்வாங்கி ஐந்தாறு மடங்கு கூடுதலாக நடித்து எக்சோடஸ் படத்திற்கு மேலும் சிறபபு சேர்த்திருக்கின்றனர் கிறிஸ்டியன் பேல், ஜோயல் எட்ஜிர்டன், ஜான் டர்டியூரோ, ஆரோன் பால், சிகோர்னி வேவர் உள்ளிட்டோர். மேற்படியாளர்களைப் போன்றே இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பென் கிங்ஸ்லியும் தன் சிறப்பு கதாபாத்திரத்திற்கேற்ப பளிச்சென நடித்திருக்கிறார்.

சாரை சாரையாக போர்வீரர்கள், அடிமைகள் அத்தனை பேர் கும்பலிலும், போர்முனை வீரர் கும்பல்களிலும் கூட ஹீரோ கிறிஸ்டியன் பேல்லும், அவரது நடிப்பும் தனித்து தெரிவதும், அவருக்கென ஒரு காதலும், அதை சார்ந்த குடும்பமும், குழந்தையும் வைத்து கதை பின்னியிருப்பதும் டைரக்டர்ஸ் டச்!.

மிக அற்புதமான காட்சி அமைப்புகள், பிரமாண்ட செட்டுகள், அரங்குகள், தெளிவான படப்பிடிப்பு, பொருத்தமான இசை, நேர்த்தியான படத்தொகுப்பு என பல அம்சங்களிலும் உயர்ந்து நிற்கும் இத்திரைப்படம்., 2014ம் ஆண்டில், அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாம், பார்த்தாலே அது ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது இப்படத்தின் பெரும்பலம்!.

தனியொரு மனிதனின் போராட்டம் பற்றிய இக்கதையை 150 நிமிடங்கள் ஓடுவதே தெரியாமல் ஓடவைத்த டாரியஸ் வோல்ஸ்கியின் ஒளிப்பதிவு, ஆல்பர்டோ இக்லிசியாஸின் இசை, பெல்லி ரிச்சின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள். ரிட்லி ஸ்காட்டின் இயக்கத்திற்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் எக்சோடஸ் படத்தை, பெரிய வெற்றிப்படமாக்கியுள்ளன என்றால் மிகையல்ல!.

மொத்தத்தில், "எக்சோடஸ்.," - எக்ஸ்டார்டினரிஸ்!.
ADVERTISEMENTS