நாங்‌கெல்லாம் ஏடாகூடம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
9வடசென்னையின் பிரதான வீரவிளையாட்டான குத்துச்சண்டையும், அதன் பின்னணியில் லட்சக்கணக்கில் நடக்கும் பெட்டிங்கும், தாதாயிசமும் தான் நாங்கெல்லாம் ஏடாகூடம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

சின்ன வயதிலேயே அனாதையாகும் நாயகன் மாரி, தன் நண்பன் வேலுவுடன் டோக்கியோ மணி மாஸ்டரிடம் பாக்ஸிங் பழகுகிறான். சின்ன சின்ன வழிப்பறி, ஜேப்படிகளை செய்து வயி்ற்றை கழுவும் மாரியும், வேலுவும் அந்த காசில், மாஸ்டருக்கும் நாஷ்டா, இரவு சிற்றுண்டி, மதியம் புல் மீல்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்து பாக்ஸிங்கில் பலே சொல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கின்றார். இது ஒருபக்கம், இன்னும் ஒரு பக்கம் சாப்ட்வேர் இளம்பெண் மகா மீது காதலும் கொள்கிறார் மாரி. மகாவிற்கும், மாரி மீது ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. இந்நிலையில், பாக்ஸிங்கால் தாதாவாகி, பின் தொழில் அதிபர் ஆன அந்த ஏரியா செகண்ட் பிசினஸ் பெரும்புள்ளி தேவராஜ்., குத்துச்சண்டை பரம்பரை என பெரிதாய் பேசிவரும் டோக்கியோ மணி மாஸ்டரின் சொத்தையும்., பாக்ஸிங் தொழிலையும் ஒருசேர முடக்க நினைத்து ஒரு பெரும் பெட்டிங்கிற்கு ஏற்பாடு செய்கிறார். அதற்கு மணியின் சீனியர் சிஷ்யர் குமாரை கழற்றி விட்டு, மாரி களமிறங்கி வெற்றிவாகை சூடி மணி மாஸ்டரின் பரம்பரை புகழையும் சொத்துபத்தையும் காபந்து செய்கிறார். இதில் நாயகி மகாவிற்கும் பூரண சந்தோசம்...காரணம் தேவராஜால் தன் தந்தையையும், சொந்த வீடு மற்றும் பரம்பரை வைரத்தையும் இழந்து பரிதவித்து போய் தேவராஜை தேடிப்பிடித்து பழிவாங்கத்தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்த்தபடி காத்திருக்கிறார் கதாநாயகி மகா., எனப்தும் இப்படத்தின் கிளைக்கதைகளில் ஒன்று!. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் அவருக்கு நாயகரின் வெற்றியும், தேவராஜின் பெட்டிங் பிஸினஸ் நஷ்டமும் சந்தோசத்தை தருகிறது. அப்புறம்? அப்புறமென்ன...? மணிமாஸ்டர் முன்னிலையில், மாரியும், மகாவும் மாலைமாற்றிக்கொள்ள., நாங்கெல்லாம் ஏடாகூடம் சுபமாக முடிகிறது.

மாரியாக அறிமுகம் மனோஜ் தேவதாஸ்., மகாவாக அறிமுகம் வீணாநாயர், வில்லன் தேவராஜாக அறிமுகம் ராஜேஷ், நண்பன் வேலுவாக அறிமுகம் விசாகர், மாஸ்வர் மணியாக அறிமுகம் ஜார்ஜ் விஜய், சீனியர் சிஷயர் குமாராக அறிமுகம் பாலாஜி, ரேணுவாக அறிமுகம் ஹென்சா உள்ளிட்ட எல்லோரும் இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி ...என ரொம்பவே இயல்பாக நடித்திருப்பது தான் ஏடாகூடம் படத்தின் பலம், பலவீனம் இரண்டும்!

ஆர்.எஸ். சரவணன்பிள்ளையின் ஒளிப்பதிவில், வடசென்னை கலீஜாகவும், கலர்ஃபுல்லாகவும் காட்டப்பட்டிருக்கிறது. சார்லஸ் மெல்வினின் இசையில் பாடல்கள் பரவாயில்லை!. படத்தொகுப்பாளரின் கத்திரி இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்., ஒருசில இடங்களில் கமர்ஷியல் படமாகவும், ஒரு சில இடங்களில் டாக்குமெண்டரீ பட சாயலிலும் இருக்கிறது. ஆர். விஜயகுமாரின் எழுத்து, இயக்கத்தில் பாக்ஸிங் எனும் குத்துச்சண்டை பயிற்சி, மனவலிமைக்கும், உடல்வலிமைக்குமான பயிற்சிதானே ஒழிய, அதை வைத்துக்கொண்டு ரவுடியிசமும், தாதாயிசமும் கூடாது எனும் அட்வைசுடன் பெயருக்கு ஏற்ற மாதிரியே ஏடாகூடமாக முடிகிறது. நாங்கெல்லாம் ஏடாகூடம் திரைப்படம்!.
ADVERTISEMENTS