ஜித் (இந்தி) திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
1

ஸ்டார் : 1

ஹேட் ஸ்டோரி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, அனுபவ் சின்காவின் தயாரிப்பில் இயக்கியிருக்கும் படம் ஜித். படம் குறித்து இனி பார்ப்போம்...

கதை

இரண்டு பெண்கள் ( ஸ்ரத்தா தாஸ் மற்றும் மன்னாரா ) மற்றும் ஒரு ஆண் (கரன்வீர் சர்மா). இரண்டு பெண்களும், தாங்கள் அணிந்துள்ள உடைகளை கழட்டுவதிலேயே எப்போதும் பிசியாக இருக்கிறார்கள். ஆண் கதாபாத்திரம், காதல் செய்வதில் பிசியாக இருக்கிறான். பெண்கள் கவர்ச்சியாக இருப்பதன் பின்னணியில் இருக்கும் ஒரு விபத்து மற்றும் அதற்கு பழிக்கு பழிவாங்குதல் கதையை உள்ளடக்கியதே இந்த படம். படத்தின் கிளைமாக்ஸ், அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் அமையவில்லை என்பது வருத்தமே...

இயக்கம்

சாக்லேட், டி டனா டான் கோல் மற்றும் புத்தா இன் டிராபிக் உள்ளிட்ட மக்களால் விரும்பத்தக்க படங்களை எடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு, இந்த படம் மிகப்பெரிய சறுக்கல் என்றே கூற வேண்டும். இந்த படம், அப்பெண்களின் தோலின் நிறத்தை காட்ட மட்டுமே பயன்பட்டிருக்கிறது. படங்களில் இனிமையான சில பாடல்கள் இருப்பது சற்று ஆறுதலளிக்கிறது. பாடல்களை படமாக்கிய விதமும் அருமை. படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. பின்னணி இசை பிரமாதமாக உள்ளது. கிளிஷே கதை என்பதால், தரமான திரைக்கதை அமைப்பதில், இயக்குனர் தோல்வியடைந்து விட்டார் என்றே கூறவேண்டும். வசனங்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கலை மற்றும் காஸ்டியூம் பரவாயில்லை என்றே கூற வேண்டும்.

நடிகர்களின் நடிப்பு

நடிப்பின் அடிப்படையில் பார்த்தால், மன்னாரா திறமையான புதுவரவு என்றே கூற வேண்டும். முதல் படம் என்பதால், கேமரா முன் எப்படி நடிப்பது என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும் இருந்தாலும், சில காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். மன்னாராவின் நடிப்பு, சி காட்சிகளில், கேமராவிற்கு பொருந்தாததாகவே உள்ளது, இருப்பினும் அவளின் நடிப்பு பரவாயில்லை. கரன்வீர் சர்மா, இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரின் பாத்திரம் பலம்பொருந்தியதாக அமைக்கப்படவில்லை. ஸ்ரத்தா தாஸின் நடிப்பு குறைகூற இயலாது.

மதிப்பீடு

கவர்ச்சி காட்சிகளை விரும்புபவர்கள் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம்
ADVERTISEMENTS