நாய்கள் ஜாக்கிரதை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
05நடிகர் சிபிராஜ், தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடம் வேண்டி தயாரித்து, நாயகராகவும் நடித்திருக்கும் புதுமையான படம்தான் "நாய்கள் ஜாக்கிரதை".

காஷ்மீர் லடாக் பகுதி இந்திய எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கி, குண்டுகளுக்கு தன் எஜமானரான ராணுவ வீரரை பறிகொடுத்து விட்டு அங்கு சுற்றி, இங்கு சுற்றி தமிழ்நாடு போலீஸில் எஸ்.ஐ.ஆக இருக்கும் சிபிராஜிடம் அடைக்கலமாகிறது அந்த உயர்ஜாதி ரக நாய். சுப்ரமணி எனும் பெயருடைய அந்த நாயை முதலில் பார்த்து மிரளும் சிபிக்கு, ஒருகட்டத்தில், தன் கடமையை செய்ததற்காக, தன் காதல் மனைவி அருந்ததியை கடத்தி உயிரோடு புதைக்கும் சைக்கோ கும்பலை கூண்டோடு பிடித்து கொன்று குவிக்க அந்த நாயே உதவுவதும்., அருந்ததியின் உயிரை காப்பாற்றி, சிபிக்காக அந்த நாய் உயிரை விடுவதும் தான் "நாய்கள் ஜாக்கிரதை" படத்தின் மிரட்டும் மீதிக்கதை!.

சிபிராஜ்., நவீன சினிமாவிற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு மிரட்டலாக நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக, துப்பாக்கி குண்டு வெடிக்கும் சப்தத்திற்கு பயப்படும் அவரது பாத்திர படைப்பு புதுமை!. சிபியின் துப்பாக்கி குண்டு சப்த பயம், நாய் சுப்ரமணிக்கும் உண்டென்று கூறும் ஓப்பனிங் நாய் பிளாஸ்பேக் சீனும், நன்றியுள்ள ஜீவனின் நடிப்பும் கூட தூள்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் போராடும் அருந்ததி., அழகான பெண்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் தள்ளி, அவர்கள் மூச்சுமுட்ட தாக்கு பிடிக்கும் நேரத்தை, காமிரா உதவியுடன் கவுன்ட்டவுன் செய்யும் சைக்கோ வில்லன் பாலாஜி(சுட்டகதையில் ஹீரோவாக சுட்டதை விட, CvÀ வில்லனாக பாலாஜி ஜொலித்திருக்கிறார், ஜெயித்திருக்கிறார்...), ஓப்பனிங் சீனில் டிடெடிக்டிவ் நாய் சுப்ரமணியுடன் ஒய்யாரமாக பனிப்பிரதேசத்தில் உலா வந்து உயிரை விடும் இளம் இந்திய ராணு வீரர் சித்து, சிபியின் தங்கச்சியாக வரும் இளம்பெண், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையாக வந்து பரிதாபமாக உயிரை விடும் அருள்.டி.ஜோதி உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். தருண்குமாரின் இசையில், நாய் பாடல், நாயகர் பாடல், நிஷாரின் ஒளிப்பதிவு, ப்ரவீன்-ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்.இப்படத்திற்கு பெரும்பலம்.
"சிங்கம்புலி உலவுகிற காட்டுல சாதாரண நாய்க்கு பயப்படுறியே..., மூன்றாம் பிறை பட காலத்தில் இருந்து நாய்க்கு சுப்பிரமணி தானே பேரு..." உள்ளிட்ட காமெடி, கடி டயலாக்குகள், இப்படத்தில் வரும் காற்று புகமுடியாத சவப்பெட்டிக்குள் மழைநீர் புகும் ஓட்டைகள் உள்ளது மாதிரி ஒருசில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், இதையெல்லாம் சரிகட்டி, சக்தி சவுந்தர்ராஜனின் இயக்கத்தில், நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் "ரசிகர்கள் ஜாலிங்கிறதை" மெய்ப்பிக்கின்றன. பேஷ், பேஷ்!
ADVERTISEMENTS