ஞான கிறுக்கன் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
10தாஜ்நூரின் இசையில் இளையதேவனின் இயக்கத்தில், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு யதார்த்தமான தமிழ்சினிமா! ஆனாலும், அளவுக்கு அதிகமான யதார்த்தமும் ரசிகர்களை படுத்தும் என்பதற்கு சான்றாக, ஞானகிறுக்கனின் பின்பாதி படு்த்தி எடுப்பதை இயக்குனரும், படத்தொகுப்பாளரும் இணைந்து கத்தரி போட்டிருந்தார்கள் என்றால், ஞானகிறுக்கன் ரசிகர்கள் முழுதும் நேசிக்கும் கிறுக்கனாக திகழ்ந்திருப்பான். இனி, இப்படக்கதை, களம் பற்றி பார்ப்போ்ம....

செந்தி - டேனியல் பாலாஜி தமபதிகளின் வாரிசு ஜெகா., தான் பிறந்தது முதல் மனநிலை பாதிக்கப்பட்ட அப்பா, காதலனுடன் ஓடிப்போன அக்கா, வயசுக்கு வந்த மற்றொரு அக்கா., ஒதுக்கி வைத்த ஊர்., உறவு... இத்தனை சிரமங்களுக்கு இடையேயும், இவர்களுக்காக போராடும் அம்மா செந்தியை அம்போ என கிராமத்தில் விட்டுவிட்டு விவரம் புரியாத வயதில் திருச்சி சிட்டிக்கு வந்து ஹோட்டல் மற்றும் லாட்ஜில் வேலைபார்த்து எக்கச்சக்கமாய் சம்பாதி்த்து ஊர் திரும்புகிறார் ஹீரோ. ஊரே ஒன்று திரண்டு ஓடிப்போய் திரும்பியவரை வரவேற்கிறது. மீண்டும் திருச்சி திரும்புவதற்குள், ஹீரோவுக்கு ஊரில் ஒரு காதல் அரும்புகிறது. அந்த காதலிக்கு அன்பு பரிசாக தங்க மோதிரம் ஒன்றை ஹீரோ தர., அது மீண்டும் ஹீரோவை ஊரைவிட்டு தரத்துகிறது. லாட்ஜ் வேலையும் பறிபோகிறது. திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் ஹீரோவுக்கு எந்த வேலையும் கிடைக்காத சூழலில், ஒரு அபலைப் பெண்ணிற்கு அடைக்கலம் தரவேண்டிய சூழல் வருகிறது. வயிற்றில் கருவுடன் இருக்கும் அந்த அபலை பெண்ணிற்காக, ஹீரோ ஜெகாவும்., அவருடன் சேர்ந்து தம்பி இராமைய்யாவும் படும்பாடு தான் ஞானகிறுக்கன் மொத்த படமும்!.

ஹீரோ ஜெகா, டேனியல் பாலாஜி, அர்ச்சனாகவி, சுஷ்மிதா, செந்தி, தம்பிராமையா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரம் அறிந்து கூடுதலாகவே நடித்திருப்பது சற்றே உறுத்தல் என்றாலும் யதார்த்தமாக தெரிகிறது. கிராமத்து காதல் எபிசோட் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அநியாயத்திற்கு சோகம் பிழிய பிழிய, இளையதேவனின் இயக்கத்தில், காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது ஞானகிறுக்கனின் பலமா? பலவீனமா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!.

ஆனாலும், இதையெல்லாம் தாண்டி தாஜ்நூரில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், எஸ். செல்வகுமாரின் இசையும் ஞானகிறுக்கனோடு ரசிகர்களை ஒன்றவிடுவது இப்படத்திற்கு பெரும்பலம்!.

மொத்தத்தில், ஞானகிறுக்கன் - நியாய கிறுக்கன்!. ரசிகர்களும் கிறுக்கனா?! என இயக்குனர் இன்னும் யோசித்திருக்கலாம்!
ADVERTISEMENTS